தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அண்மைக்காலமாக பல இடங்களிலும் பேசிவருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இக்கூட்டத்தில் பங்கெடுத்த ஜனநாயகப்போராளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் அதே மேடையில் வைத்து தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் காட்டிக்கொடுப்புக்களை அம்பலப்படுத்தியிருந்தார்.
முன்னதாக இலங்கை காவல்துறை மற்றும் அதிரடிப்படையின் சோதனை கெடுபிடிகளின் மத்தியில் இப்பிரச்சார கூட்டம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.