எல்லோரும் என்னை சாமியாக்கி விட்டதால் தான் இன்று இந்த நிலை – பிரபாகரன் தளபதிகளுக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகத்தமிழினத்துக்கு கிடைத்த ஒரு பிரம்மா அஸ்திரம். அவரிடம் இருந்த தீர்க்க தரிசனம் மற்றும் சிறந்த ஆளுமை நேர்மை பணிவு, தன்னலம் இல்லா பெருந்தன்மை என்பவற்றினை அவரை புரிந்தவர்களுக்கும், அருகிலிருந்து வளர்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

அந்த வகையில் அவருக்கு உதவியாளனாக இருந்த காலத்தில் அவரிடம் இருந்து கற்ற விடையங்களையும் அவரை புரிந்துகொண்ட விடையங்களையும் செண்பகம் இணையம் ஊடாக உலகத் தமிழ் மக்களுக்கு பகிர்வதில் பெருமைப் படுகிறேன்.

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்திருந்த காலம் அது. அப்போது போராளிகளும் சரி மக்களும் சரி தலைவர் கண்டிப்பாக ஏதாவது திட்டம் வைத்திருப்பார். அவர் பார்த்துக் கொள்வார் என நம்பிக்கையோடு இருந்தார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்ற பழமொழியை அப்போதும் யாரும் புரிந்து கொள்ள வில்லை.

ஆனந்தபுர பெரும் சமரில் பல்லாயிரம் இராணுவத்தினரை கொன்று குவித்து வீரகாவியமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் சிறந்த தளபதிகளை இழந்த சோகத்தில் அனைவருமே மூழ்கி போயிருந்தோம். அப்போது அந்த இடத்திற்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு.நடேசன் அண்ணா அவர்கள் என்னிடம் என்ன சோகமாக இருக்குறாய் என கேட்டார்.

நானும் இல்லை அண்ண..எல்லாம் முடிஞ்சிட்டு..இனி என்னதான் நடக்க போகுதோ தெரிய இல்ல..என கவலையாக கூறினேன். அப்போது அவர் என்னை பார்த்து ஒரு புன்னகையோடு கூறினார். நீ இப்படி கூறலாமா? தலைவர் இருக்கும் போது நீ ஏன் இப்படி யோசிக்கிறாய்.அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார். என என் முதுகை தட்டிவிட்டு சென்றார்.

நான் மறுநாள் மாலை தலைவர் பிரபாகரனிடம் இது தொடர்பாக கூறினேன். எல்லோரும் அண்ணா இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார் என இப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என அவரிடம் சொன்னேன். அதற்கு தலைவர் என்னிடம் சற்று கோபமாக எல்லோரும் என்னை சாமியாராக்கி விட்டதால் தான் இன்று இந்த நிலை. நான் சொன்னதை மட்டும் எல்லோரும் செய்திருந்தால் இன்று இந்த நிலைமைக்கு வந்திருப்போமா? என கேட்டார்.

தலைவர் கூறியது நூறு வீதம் உண்மை. சமாதான காலத்தில் தலைவர், அடுத்து பெரும் யுத்தம் வரும். தயாராகுங்கள் என கூறியபோது எவருமே நம்பவில்லை. யாழில் மக்கள் போராட்டத்துக்கு பெரும் பங்களிப்புச் செய்வார்கள் என எதிர்ப் பார்த்ததும் ஏமாற்றமே மிஞ்சியது. போராளிகள் பற்றாக்குறை ஆயுதக் கப்பல்கள் சதியால் மூழ்கடிக்கப்பட்டது.

தலைவரின் தீர்க்க தரிசனத்தில் ஒவ்வொரு முறையும் அவர் கூறியதை மட்டும் அனைவரும் கேட்டு அதன்ப டி செயட்பட்டிருந்தாலே போதும் என்றோ தனித் தமிழீழம் உருவாகியிருக்கும். அடுத்து வரும் தொடர்களில் வெளிவராதள் அறிவீர்கள்..

தொடரும் ..

கடவுள்சாமியார்தேசியத் தலைவர்நடேசன்பிரபாகரன்யுத்தம்
Comments (0)
Add Comment