தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணி திரள ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தேசத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இனஅழிப்பு நடவடிக்கைகளின் அங்கங்களான பௌத்த சிங்களக்குடியேற்றம், தமிழ் மக்களின் மீள்குடியமர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமை, காணாமல் போனவர்கள் விடயத்தில் காட்டப்படும் அசமந்தப் போக்கு, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதை காலம் தாழ்த்தும் கபடத்தனம் என்பவற்றைக் கண்டித்து இப் பேரணி நடைபெறவுள்ளது.
இப் பேரணிக்கு அனைத்துத் தரப்புகளையும் ஆதரவு தருமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இப்பேரணிக்கு தமிழ் அமைப்புக்கள் பலவும் தமது ஆதரவைத் தெரிவித்தவண்ணமுள்ளன. வடமாகாணசபையும் முழு அளவினில் ஆதரவை நல்க உறுதியளித்துள்ளது. போக்குவரத்து எற்பாடுகளை வடமாகாண போக்குவரத்து அமைச்சு பொறுப்பேற்றுள்ளது.