எழுதுகின்றேன் ஒரு கடிதம் எம் மண்ணில் உயிர்நீத்த எம் உறவுகளிற்காய்…

எழுதுகின்றேன் ஒரு கடிதம்
எம் மண்ணில் உயிர்நீத்த
எம் உறவுகளிற்காய்…

9 ஆண்டுகள் ஆனபோதும்
மறையாத வடுவாய்
நம் மனங்களில்
வாழ்கின்ற நம் உறவுகளிற்காய்…

ஆண்ட பரம்பரை நாங்கள்
அன்னியர்முன் கைநீட்டி
பிச்சை கேட்டதில்லை
எம் மண்ணிற்காய்..
உயிர் நீத்தவர்கள் கூலி படையுமில்லை
காட்டிகொடுத்த கயவர்களும் இல்லை..

உதிரம் கொடுத்து உயிர்கொடுத்த
எம் அன்னையைவிட அதிகமாய்
அவர்கள் நேசித்தது நம் தேசத்தையே..

இன்றும் நடு இரவில் விழித்து
தன் மகனை தேடும் தாய்
தந்தை எப்போ வருவார் என
கேட்கும் பிஞ்சு மழலை..
பதில் சொல்ல தெரியாமல்
தவிக்கும் தாய்
வாசலில் தன் கணவன் வருகயை
எதிர்பார்க்கும் மனைவி…

அத்தனை வலிகளையும் கடந்து
என்றோ ஒரு நாள் நம் தேசத்திற்கு
விடியல் கிடைக்கும்..
அன்று நீங்கள் சிந்திய குருதியில்
மலர்ந்து சிரிக்கும் ஓர் அக்கினிப்பூ….

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்…

யாழ் கனக சனா

ஓர் அக்கினிப்பூகவிதைமுள்ளிவாய்க்கால்
Comments (0)
Add Comment