ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் அங்கு முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தாக்குதலினால் இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
மூன்றாண்டு கால உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஹொடைடா விமான நிலையத்துக்கு சில மீட்டர் தூரத்தில் அல் மன்ஸர் பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆவேசமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது