கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. லீக் சுற்றில் சென்னையில் நடந்த போட்டியில் மும்பையும், மும்பையில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றன.
முதல் தகுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதால், மும்பை இண்டியன்ஸ் அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் 21 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 11 போட்டிகளிலும், சென்னை அணி 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.