மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.
நடப்புத் தொடரின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய மும்பை அணி, பின்னர் எழுச்சி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் 20 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.