ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 400 பேர் பலி?

ஐரோப்­பாவைச் சென்­ற­டை யும் முயற்­சியில் பய­ணத்தை மேற்­கொண்ட குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்­றிச்­சென்ற பட­குகள் திங்­கட்­கி­ழமை எகிப்­திய கடற்­க­ரைக்கு அப்பால் கவிழ்ந்­ததில் அவற்றில் பயணம் செய்த 400 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இத்­தாலி ஜனா­தி­பதி செர்­கியோ மற்­ற­ரெல்லா உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.
அந்தப் பட­கு­களில் பயணம் செய்­த­வர்கள் சோமா­லியா, எதி­யோப்­பியா எரித்­தி­ரியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர்கள் இத்­தா­லியை நோக்கிப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.
அந்தப் பட­கு­களில் பயணம் செய்த 29 பேர் மீட்புப் பணி­யா­ளர்­களால் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
அதே­ச­மயம் நேற்று திங்­கட்­கி­ழமை ஐரோப்­பா­வுக்கு செல்லும் முக­மாக லிபிய பிராந்­தி­யத்­தி­லி­ருந்து புறப்­பட்ட குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் பய­ணத்தை மேற்­கொண்ட மிதவைப் பட­கொன்று லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் கவிழ்ந்­துள்­ளது.
இந்த சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த 6 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அதே­ச­மயம் அந்தப் படகில் பய­ணித்த 108 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
மீட்­கப்­பட்­ட­வர்கள் கிரேக்கத் தீவொன்­றுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
இந்த வருடம் ஐரோப்­பாவை சென்றடையும் முயற்சியில் சுமார் 180,000 பேர் ஆபத்து மிக்க கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. அவர்களில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

அகதிகள்இத்தாலிஎகிப்துஐரோப்பாசோமாலியாபடகுபலிவிபத்து
Comments (0)
Add Comment