ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி அட்லெடிகோ கொல்கத்தா- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன

இந்தியன் சூப்பர் ‘லீக்’ (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி 8 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.  ஐ.எஸ்.எல். போட்டியின் 41-வது ‘லீக்’ ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ கொல்கத்தா- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.  

கொல்கத்தா அணி 3 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கவுகாத்தியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்று முன்னேற்றம் காணும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. வெற்றி பெற்றால் அந்த அணி 2-வது இடத்துக்கு முன்னேறும்.  கொல்கத்தா அணி ஏற்கனவே நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் அந்த அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.  கவுகாத்தி அணி 3 வெற்றி, 1 டிரா, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.

அட்லெடிகோஅணிகள்ஐஎஸ்எல்கவுகாத்திகால்பந்துகொல்கத்தாபோட்டி
Comments (0)
Add Comment