கடந்த செவ்வாய் புதன்கிழமைகளில், ஜெனிவா ஐ.நா. மண்டபத்திலும், ஐரோப்பிய ஒலிபரப்பு சங்கத்தின் தலைமை காரியலாயத்திலும், சர்வதேச ஊடகவியலாளரின் காங்கிரஸ் நடைபெற்றது. இவ் மாகாநாட்டில் உலகில் பல பாகங்களிலிருந்தும் ஊடகத்துறையின் முக்கிய புள்ளிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இவ் மகாநாட்டை ஒழுங்கு செய்து நாடாத்திய சர்வதேச பத்திரிகை நிறுவனத்தினருக்கு உலகில் ஏறக்குறைய நூற்று இருபது நாடுகளில் அங்கத்தவர்கள் உள்ளார்களென்பது குறிப்பிடத்தக்கது. இவ் மாகாநாட்டை ஐ.நா.வின் ஜெனிவா பிரதான இயக்குனர், திரு.மிசேல் முல்லார் ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து, சர்வதேச பத்திரிகை நிறுவனத்தினரின் நிர்வாக இயக்குனர், திருமதி பாபரா றீபோனி உட்பட உலகின் ஊடகத்துறையின் முக்கிய புள்ளிகள் பலர் உரையாற்றினர்.
மாகாநாட்டில் ஊடகத்துறை பற்றிய பலவித கலந்துரையாடல்கள் அமர்வுகள் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளரின் தலைமையில் நடைபெற்றன.ஐரோப்பா, பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, ஆபிரிக்கா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளின் முக்கிய ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் மாகாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கைதீவில் தமிழீழ மக்களின் மனித உரிமை, அரசியல், மற்றும் சர்வதேச விவாகாரங்கள் பற்றிய ஆய்வு கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக நீண்ட காலமாக எழுதி வரும் திரு. ச. வி. கிருபாகரனும் (பிரான்ஸ்) இவ் மாகாநாட்டில் பங்கு பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ மக்களிற்கு நன்கு அறிமுகமான பிரபல்யமான இந்திய பத்திரிகையாளாரான, திருமதி அனிதாப் பிரதாபும் இவ் மாகாநாட்டின் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.