8–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப்போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியும் வீரர்களை விடுவிடுக்கும் ‘கெடு’ நேற்று முன்தினம் முடிந்தது. அதன்படி யுவராஜ்சிங் (பெங்களூர்), பீட்டர்சன், முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் (டெல்லி) உள்பட முன்னணி வீரர்கள் தங்கள் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
123 வீரர்கள் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 79 பேர் இந்திய வீரர்கள், 44 வெளிநாட்டு வீரர்கள் இதில் அடங்குவார்கள். விடுவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள்.