ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா நேற்று மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
ஆலயத்தில் இடம்பெற்ற பூசைகளை தொடர்ந்து எம்பெருமான் வேட்டைக்காக எழுந்தருளி சென்று வேட்டை முடிந்தும் பக்கத்த்களுக்கு அருள்பாளித்தவாறு நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதிவழியாக எழுந்தருளி ஆலயத்தை வந்தடைந்தும் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது
வீதியில் இருமருங்கிலும் பக்தர்கள் கும்பங்கள வைத்து எம்பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்துகொண்டனர்
பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வேடுவர் உடையணிந்து தமது நேர்த்திக்கடன்களை பூர்த்தி செய்ததோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேட்டை திருவிழாவில் பங்குகொண்டனர்.