தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது அவர் சாமி 2, சண்டக்கோழி 2, நடிகையர் திலகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி.
120 ஆடைகள்
இதில் நடிகையர் திலகம் படத்தில் அவர் அப்படியே சாவித்திரியாக மாறியிருக்கிறார். இந்த படத்தில் நடித்து விட்டு நடிகை சாவித்ரி போல் அனைவருக்கும் தங்க காசுகள் பரிசாக கொடுத்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மே 9 ஆம் திகதி படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்துக்காக 120 ஆடைகளை அணிந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும், . படத்தின் ஆடை வடிவைமைப்பாளர் மிகவும் சிரமப்பட்டு ஆடை வடிவமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப்படத்தின் வெளியீட்டுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.