ஒற்றையாட்சி முறையை ஒரு போதும் ஏற்கமாட்டோம்!

நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்போயிருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக ஐக்­கிய இலங்­கைக்குள் பகி­ரப்­பட்ட இறை­யாண்­மையில் அதி­யுச்ச சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்றே அவ­சி­ய­மாகும். இத­னையே நாம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஒற்றை ஆட்சிக் கோட்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்­லை­யென எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சூளு­ரைத்­துள்ளார்.

தற்­போது ஏற்­பட்­டுள்ள பொன்­னான சந்­தர்ப்­பத்தை நழு­வ­விட்­டு­வி­டக்­கூ­டாது.

முஸ்­லிம்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு சிங்­கள மக்­களை பகைத்­துக்­கொள்­ளாது நீடி த்த நிலை­யான தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்­ள

வேண்டும். எமது மக்கள் ஏற்­காத எத­னையும் நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­வ­தில்­லை­யென்­பது உறு­தி­யா­ன­தெ­னவும் இரா.சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் விடேச ஒருங்­கி­ணைப்­புக்­குழு கூட்டம் நேற்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் கிளி­நொச்சி கூட்­டு­றவு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. காலை 10.30இக்கு ஆரம்­ப­மான இக்­கூட்­டத்தில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்கள், வடக்கு கிழக்கை பிர­தி­நி­தி­தித்­துப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன், மாகாண அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள் எனப் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

புதிய அர­சியல் அமைப்பு தயா­ரிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்­றத்தை அர­சியல் அமைப்பு பேர­வை­யாக செயற்­ப­டு­வ­தற்­கான சட்­ட­மூ­லத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்­துள்ள நிலையில் அர­சியல் தீர்வு, கூட்­ட­மைப்­பினுள் காணப்­படும் முரண்­பா­டுகள், பொது­மக்­களின் பிரச்­சி­னைகள், அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள், அர­சி­ய­ல­மைப்பில் கூட்­ட­மைப்பின் பங்­கு­ப­ணிகள் உட்­பட பல விட­யங்கள் நீண்ட நேர­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது.

இக்­கூட்­டத்தில் தலை­மை­யு­ரை­யாற்­று­கை­யி­லேயே இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

நாம் புதிய நிலை­மையில் இங்கு கூடி­யி­ருக்­கின்றோம். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினுள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­ற­மையை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஜன­நா­யக கட்­ட­மைப்­பொன்றில் அவ்­வா­றான முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யாது. ஆனால் அதனை பெரி­து­ப­டுத்­த­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

எமது மக்கள் நீண்­ட­கா­ல­மாக பிரச்­சி­னைக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றார்கள். பாதிக்­கப்­பட்ட அவர்­க­ளுக்கு பரி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும். அதே­நேரம் எமது மக்கள் கௌர­வ­மா­கவும் பாது­காப்­பா­கவும் வாழு­வ­தற்­கான சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு சூழல் உரு­வாக்­கப்­ப­டு­வ­தாயின் இங்கு புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிடித்து நிலைத்­தி­ருக்­க­கூ­டிய நிரந்­த­ர­மான தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு எவ்­வா­றான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை நாம் பல்­வேறு நாடு­களின் தலை­வர்­க­ளு­ட­னான ஒவ்­வொரு சந்­திப்­பு­களின் போதும் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். அதில் தொடர்ச்­சி­யாக உறு­தி­யு­டனும் இருக்­கின்றோம்.

நான் ஒற்­றை­யாட்சிக் கோட்­பாட்டை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தாக கூறு­கின்­றார்கள். கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள். அவை நிரா­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டி­யவை. நான் ஒற்­றை­யாட்சிக் கோட்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­து­மில்லை.

எமது மக்கள் தமது பூர்­வீக மண்ணில் சுதந்­தி­ர­மாக, கௌர­வ­மாக, பாது­காப்­பாக வாழ­வேண்டும். அவர்­களின் எதிர்­காலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அமை­ய­வேண்டும். வடக்கு கிழக்கு எமது மக்­களின் பூர்­வீக தாய­க­மாகும். தற்­போது உயர் நீதி­மன்றில் வழங்­கப்­பட்ட தீர்ப்­பினால் வடக்கு கிழக்கு பிரிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்­கப்­ப­ட­வேண்டும். மாகாண சபை­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். ஐக்­கிய இலங்­கைக்குள் பகி­ரப்­பட்ட இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் அதி­யுச்ச சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

எமது மக்கள் எமக்கு ஆணை வழங்­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத எத­னையும் நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அவர்­களின் அனு­ம­தி­யு­ட­னேயே நாம் எவ்­வி­த­மான விட­யங்­க­ளையும் ஏற்­றுக்­கொள்வோம். தற்­போ­தைய சூழலில் எமது பிரச்­சினை சர்­வ­தேச ரீதியில் முதன்மைப் படுத்­தப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் இந்த நாட்டில் கடந்த காலத்தில் ஒரு சர்­வா­தி­கார போக்­கு­டைய ஆட்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்து. எமது மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஜன­வரி எட்டாம் திகதி புதிய மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக இருக்­கின்றார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக காணப்­ப­டு­கின்றார். தென்­னி­லங்­கையின் இரண்டு பிர­தான கட்­சி­களும் கூட்­டாக இணைந்து ஆட்­சியை முன்­னெ­டுக்­கின்­றன. தேசிய அர­சாங்­க­மொன்ற உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டுள்ள புதிய சூழலில் நாட்டில் காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் எட்­டப்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தாகும். அவ்­வி­த­மான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யதும் முக்­கி­ய­மா­ன­தாகும். அவ்­வா­றில்­லா­து­விடின் அந்த ஆட்­சியை நீண்­ட­கா­லத்­திற்கு கொண்டு செல்­ல­மு­டி­யாது.

இவ்­வா­றான சூழலில் புதிய அர­சாங்கம் சில முற்­போக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. விசே­ட­மாக புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­குதல், நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் செயற்பாடுகள், பொதுமக்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு தீர்வகளை வழங்குதல், பொறுப்புக்கூறுதல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது.

தென்னிலங்கையில் புதிய அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒருபோதும் நழுவிடக்கூடாது. நாம் முஸ்லிம் மக்களை அரவணைக்கவேண்டும். அவர்களுடன் இணைந்தே தீர்வு தொடர்பான இறுதி முடிவை எட்டவேண்டும். அதேநேரம் சிங்கள மக்களையும் பகைக்ககூடாது. அவர்கள் அச்சமடையும் வகையிலான காரசாரமான கருத்துக்களை முன்வைக்க கூடாது. அனைவரும் இத்தருணத்தில் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எமது மக்களின் துன்ப துயரங்கள் நீங்கிய புதிய எதிர்காலத்திற்கான ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார்.

ஏற்கமாட்டோம்ஒருஒற்றையாட்சிபோதும்முறையை
Comments (0)
Add Comment