முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்படையினருக்கு முகாம் அமைக்கும் நோக்கில் பொது மக்களுடைய 617 ஏக்கர் காணி பிரதேச செயலாளரினால் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற அடிப்டையில் அதனை தடுத்து நிறுத்துமாறு வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் மக்களின் பார்வைக்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.அத்துடன் உரிமை கோருபவர்கள் அடையாளம் காண முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மக்கள் தங்களுடைய எதிர்ப்பை பிரதேச செயலருக்கு தெரிவித்தும் கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. அதனையடுத்து மாவட்ட அரச அதிபர் மற்றும் காணி உரிமையாளர்களும் காணி உரிமையாளர்களின் பெயர் விபரம் குறிப்பிட்டு பிரதேச செயலருக்கு அனுப்பியுள்ளனர்.
எனினும் எதனையும் பொருட்படுத்தாத பிரதேச செயலரின் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.