மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி,அடிப்படை வசதிகளற்று,தொழில் வாய்ப்புக்கள் இன்றி சமூகக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்டுள்ள மக்களே கதிரவெளி புதூர் ஆதிவாசி தமிழர்கள்
இவர்களின் அன்மைய நிலை
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாக எல்லைப் பகுதியில் வசித்த இவ் மக்கள் எந்த விதமான குறைபாடுகளும் இன்றி இருந்ததாக கூறுகின்றார்கள்.
ஆனால் தற்போது இவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லை காரணம்- * இவர்களின் பிரதான தொழிலான வேட்டையாடுதல் என்பது இலங்கை அரசின் சட்டவிரோதமானதும் தடைசெய்யப்பட்டதுமான தொழிலாக அரசு பிரகடனப்படுத்தியமை
* தேன் எடுக்கும் தொழில் இதற்கான வாய்ப்புகள் தற்போது இந்த பிரதேசங்களில் இல்லாமையும்.
* இவர்கள் கடல்தொழிலும் செய்ய முடியாமை
* கூலித் தொழில் செய்வதற்கான சந்தர்ப்பங்களோ வாய்ப்புக்களோ இல்லாமை
எமது சமுதாயத்தினர் யாருமே இவர்களை மதிப்பதுமில்லை கவனிப்பதுமில்லை
இதுவும் இவர்களை வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான தடையாக உள்ளது.
* அடிப்படை வசதிகள் அற்ற நிலமை
* குடியிருக்க நிரந்தர வீடுகள் இல்லாமை.
* சமுகம் சார்ந்த போதிய விழிப்புனர்வுகள் இவர்களுக்கு இல்லாமையும்
* பாதுகாப்பற்ற மலசல கூடங்கள்.
கல்வி
———
இங்கு 69 குடும்பத்தினர் வசிக்கின்றனர் இவர்களின் கல்வி வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது
பிள்ளைகள் பாடசாலை செல்வது குறைவு. இவர்கள் செல்லும் பாடசாலைகளில் இவர்கள் முறையான விதத்தில் வழிநடத்தப்படுவதில்லை
* போசாக்கு மட்டமும் சுகாதார வசதிகளும் அற்ற நிலைமையில் உள்ளதுடன்.
* பொருளாதாரப் பிரச்சனைகள் என்ற படியினால் இங்குள்ள மாணவர்கள் பாலப்பழம் விற்பதும்,சுற்றுலா வருபவர்களிடம் பணம் கேட்டு வாங்குவதுமே பிரதான குறிக்கோளாக செய்கின்றார்கள்.
பெண்கள் பிரதான வீதியின் அருகாமையில் உள்ள சிறிய சிறிய கற்களை ஒன்றாக சேர்த்து அதனை பாரிய குவியலாக்கி கொள்வனவு செய்ய வரும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது.
இவ்வாறு ஒருதடவை விற்பனை செய்வதற்கு 6-10 நாட்கள் தேவை.
ஆனாலும் அந்த தொழில் ஒர் இரு மாதங்களே இருக்கும்…
இவர்களின் தொழில் வாய்ப்பு பிரச்சினைகளுக்கு சிறிய ஓர் தீர்வாக தேனீர் வளர்ப்பு தொழிலை அறிமுகப்படுத்தினால் இந்த மக்கள் நன்மை.