கபடியில் இந்தியா ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளன

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கபடியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி, 27-25 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. இதன் மூலம் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

மகளிர் பிரிவு கபடி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை எதிர் கொண்டது. முடிவில் 31-21 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம், கபடியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளன.

தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் உள்பட மொத்தம் 57 பதக்கங்களைப் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது. சீனா தொடர்ந்தும் முதலிடத்திலும், ஹொங்கொங் இரண்டாமிடத்திலும் உள்ளன.

ஆசியாஆடவர்ஆட்டம்இந்தியாஈரான்கபடிசாதனைதங்கம்பதக்கம்பிரிவுமகளீர்விளையாட்டு போட்டிவெற்றி
Comments (0)
Add Comment