கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா என் பறவையே கடல் கடந்தீர்
இறங்கும் கரண்ட் மண்டைக்குள் சிதறுகிறது
கொதிப்படங்க இரத்தமுமில்லை
உன்னையடக்க நிலமுமில்லை
நமது காலத்தின் எல்லா வார்த்தைகளும்
எல்லாவற்றையும் கொல்கின்றன
எனது தந்தையே
நாம் வார்த்தைகளால் கைவிடப்பட்டோம்
பின்னும் ஏன் ,
கரண்ட் கம்பிகளில் மோதிச் சாகவா
பறவையே கடல் கடந்தீர்
கிரிசாந்த்