கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு கடும் எதிர்ப்பு: ஜெனிவாவில் பிரம்மாண்ட பேரணி

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, கலப்பு நீதிமன்ற விசாரணை தேவை என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைய அறிக்கைக்கு, தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 இதை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டம் நடைபெறும் ஜெனீவா நகரில், புலம்பெயர் தமிழர்கள் நாளை பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்துகின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்க வந்து கொண்டிருக்கிறார்.

 இலங்கை இறுதிபோர் நிகழ்வை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் போர்க்குற்றங்களுக்கு விசாரணையில் தண்டனையும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெனீவா ஐ.நா மன்றத்தைநோக்கி நாளை புலம்பெயர்கள் தமிழர்கள் பேரணி நடத்துகின்றனர். பேரணி முடிவில் கூட்டம் நடைபெறுகிறது. இன அழிப்பு விளக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

இன அழிப்புஇலங்கைஐ.நாஜெனிவாபுலம்பெயர் தமிழர்கள்போர்க்குற்றம்மனித உரிமைகள் ஆணையம்
Comments (0)
Add Comment