காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அத்துடன் அவர்கள் அதே ரயிலில் பயணம் செய்து யாழ். ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பெருளமளவான பொதுமக்கள் நின்று இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ரயில் சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவிருந்ததாகவும், இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.