தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுக் கொள்ளும் பேராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலகில் உள்ள ஆறு நாடுகளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது பிரித்தானியா கனடா , அமெரிக்கா, சுவிட்சர்லாந்து , போன்ற நாடுகளில் இடம் பெறவுள்ளது .மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அந்த நாடுகளில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களை கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது.