கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், 152ஆவது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, எமது பிள்ளைகளின் பெயர் விவரப் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்திருந்த நிலையில், இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை.
“எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதற்கே, இந்த அலுவலகம் அமைக்கப்படுவதுடன், இது ஒருபோதுமே எமக்கான தீர்வினைப் பெற்றுத்தரப் போவதில்லை. குறித்த அலுவலகம் அமைப்பதற்கு முன்னர், எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
“அதற்கு, எமது போராட்டத்துக்கு துணைபுரியும் அத்தனை உறவுகளும், ஊடகங்களும் துணைபுரிய வேண்டும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.