காணாமல் போதல் சம்பவங்கள் குறித்து ஜெனீவாவில் ஆராய்வு!

காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழு இலங்கை குறித்து பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலவந்தமாகக் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் 109வது அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன.

குறித்த அமர்வில் 40 நாடுகளில் 800 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவிருக்கின்றது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐந்து மனித உரிமை நிபுணர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதிநிதிகள் பலவந்தமான கடத்தல்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். பலவந்த கடத்தல்கள் காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தை அமுல்படுத்துவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் பேசப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆராய்வுஇலங்கைஐநாகடத்தல்கள்காணமல் போதல்சம்பவங்கள்ஜெனீவாபேச்சுவார்த்தை
Comments (0)
Add Comment