காணாமல் போனோர் தீர்வு வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு கால்நடைப்பேரணி

காணாமல்  போனோர் விவகாரத்திற்கு தீர்வு வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு கால்நடைப்பேரணியொன்று வியாழக்கிழமை முள்ளிவாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.மாலை 3 மணியளவினில் ஈழத்தமிழர் இளைஞர் பேரவை அமைப்பின் ஏற்பாட்டினில் இப்பேரணி நடைபெறவுள்ளது.

ஏதிர்வரும் வெள்ளிக்கிழமை நல்லூரினில் தொடங்கப்படவுள்ள காணாமல் போனோரது குடும்பத்தவர்களது சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு கோரியே இப்பேரணி நடைபெறவுள்ளது.

பேரணியினில் கலந்து கொள்பவர்கள் கால்நடையாக முல்லைதீவு-பரந்தன் வீதியினூடாக பயணித்து பின்னர் ஏ-9 வீதியினூடாக நல்லூரை வந்தடையவுள்ளனர்.மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இந்நடைபயணி போராட்டம் கிராமங்கள் தோறும் மக்களது ஆதரவை கோரி நிற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பம்இளைஞர்பேரவைகவனயீர்ப்புகாணாமல்கால்நடைதீர்வுபேரணிபோனோர்மாபெரும்முள்ளிவாய்க்கால்வியாழக்கிழமைவிவகாரம்
Comments (0)
Add Comment