52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற கவுரவ் சோலங்கி , அரையிறுதியில் இங்கிலாந்து வீரர் பிரண்டன் டோயர்டை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை வசமாக்கினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார்.
49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பீம்சந்த் சிங், 64 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிரயாக் சவுகான் ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்தனர். இதையடுத்து வெண்கலப்பதக்கங்களுடன் அவர்கள் நிறைவடைந்தனர்.