காமன்வெல்த் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் சந்தீப், ரிதுவுக்கு தங்கம்

சிங்கப்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சந்தீப் தோமர், அமித் தங்கார், சத்யவார்ட் கேடியான், ரிது போகத் உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.

ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியின் இறுதிச்சுற்றில் சந்தீப் தோமர் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானின் முகமது பிலாலை தோற்கடித்து தங்கம் வென்றார்.

ஆடவர் 70 கிலோ எடைப் பிரிவில் அமித் தங்காரும், ஆடவர் 97 கிலோ எடைப் பிரிவில் சத்யவார்ட் கேடியானும் தங்கம் வென்றனர்.

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரிது போகத்தும், மகளிர் 63 கிலோ எடைப் பிரிவில் ரேஷ்மாவும், 55 கிலோ எடைப் பிரிவில் பிங்கியும், 69 கிலோ எடைப் பிரிவில் லலிதாவும் தங்கம் வென்றனர். 75 கிலோ எடைப் பிரிவில் ஜோதி வெள்ளியும், நிக்கி வெண்கலமும் வென்றனர். 58 கிலோ எடைப் பிரிவில் மானு தங்கமும், சோமாலி வெள்ளியும் வென்றனர்.

இந்தியாகாமன்வெல்த்சந்தீப் தோமர்சாம்பியன்ஷிப்மல்யுத்தம்ரிது
Comments (0)
Add Comment