கால்பந்து போட்டியில் உயிரிழந்த வீரர்

கால்பந்து போட்டியின் போது எதிரணி வீரருடன் பயங்கரமாக மோதிக்கொண்டதில் கேமரூன் வீரர் பேட்ரிக் எகேங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரூமேனியாவில் நடந்து வரும் கிளப்புகளுக்கு இடையேயான முதல் டிவிஷன் போட்டியில் கேமரூன் கால்பந்து வீரர் பேட்ரிக் எகேங் (26) டைனாமோ புசரெஸ்ட் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் நேற்று நடந்த விட்டோரூல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராக களமிறங்கிய பேட்ரிக், ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் எதிரணி வீரருடன் பயங்கரமாக மோதி கீழே விழுந்தார். இந்த பயங்கர மோதலில் அவர் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எதிரணி வீரருடன் அவர் பயங்கரமாக மோதியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. மைதானத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=m9asBmki3LA” width=”560″ height=”315″]

உயிரிழப்புகால்பந்துபேட்ரிக் எகேங்போட்டிரூமேனியாவீரர்
Comments (0)
Add Comment