21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் நடைபெறவுள்ள சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடருக்கு ரோனால்டினோ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் கால்பந்துத் தொடர் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கவுள்ள போதும், தற்போது அதனை விளம்பரப் படுத்தும் நோக்கில் முன் கூட்டியே ரோனால்டினோவை வரவழைத்துள்ளனர்.
முன்னதாக துபாயில் இருந்து நேற்று காலை கொச்சின் விமான நிலையத்திற்கு வந்த ரோனால்டினோ அங்கிருந்து ஹெலிக்காப்டர் மூலம் கோழிக்கோடு வந்தார். கோழிக்கோடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் அவரை காண அங்கு குவிந்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு இடையே தன்னுடைய வாகனத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து தங்கவுள்ள ஹோட்டல் அறைக்கு சென்றார்.
ரோனால்டினோ இன்று அரசு பள்ளி ஒன்றிற்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.