கிரிக்கெட் அணியிலிருந்து விலகிய கீரன் பாவெல் பேஸ்பால் போட்டியில் பங்கேற்கவுள்ளார்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியிலிருந்து விலகிய கீரன் பாவெல் பேஸ்பால் போட்டியில் பங்கேற்கவுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே பல்வேறு தோல்விகளை சந்தித்து வருகிறது, இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகிய கீரன் பாவெல் பேஸ்பால் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

தொடக்க வீரரான இவர் இதுவரையில் 21 டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியில் பங்கேற்றுள்ளார். விரைவில் அணித்தலைவராகலாம் என நம்பப்பட்ட நிலையில், இவரது விலகல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டுவைன் பிராவோ, பொலார்டு மற்றும் கிறிஸ் கெய்ல் போன்றவர்களும் கிரிக்கெட் வாரியத்துடன் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அணிகிரிகட்கீரன்தீவுபங்கேற்புபாவெல்பேஸ்பால்போட்டிமேற்கிந்தியாவிலகல்
Comments (0)
Add Comment