கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் தீவிர செயற்பாட்டாளர்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தீவிர செயற்பாட்டாளரான யாழ்ப்பாணம் வறணியை சேர்ந்த வர்த்தகரே கிளிநொச்சியினில் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வரணியின் இடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சதீசன் எனும் 35 வயதுடைய வர்த்தகரே கிளிநொச்சியில் உள்ள அவரது வர்த்தக நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் வெளியே சென்ற போது கடத்தப்பட்டுள்ளார். வன்னி மாவட்டதிற்கான பெருமளவு பொருட்களிற்கான அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவரான அவரிடம் 32 வரையிலான வாகனங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையினில் அவரிடமுள்ள பணத்தை இலக்கு வைத்து கடத்தல் நடந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

கடத்தல்கிளிநொச்சிசெயற்பாட்டாளர்போலீஸ்யாழ்ப்பாணம்வர்த்தகர்விசாரணைவிடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment