மழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் நெருக்கடியை எதிர்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
“கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் கிடைத்த மிக அதிக மழை வீழ்ச்சி இது. இதனால் குளங்களுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கனகாம்பிகைக் குளம் அதன் கொள்ளவை விஞ்சி வான்பாய்கின்றது. அதேநேரம் 12 அடி கொள்ளளவுடைய பிரமந்த னாறுக் குளம் 11.2 அடியை எட்டிவிட்டது. அதேபோன்று 8.9 அடி கொள்ளளவுடைய குடமுருட்டிக் குளம் 7.8 அடியைத் தொட்டுவிட்டது.இதேபோன்று ஏனைய குளங்களுக்கும் தண்ணீர் வேகமாக வந்துகொண்டிருக்கிறது. சுமார் 10 அடி அளவுடைய கரியாலை நாகபடுவான் குளத்தில் மட்டும் தற்போது 2.6 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது” என்று பொறியியலாளர் தெரிவித்தார்.