தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் கடும் மழை!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் கடும் மழை பொழிந்­தது. 75 மில்லி மீற்­ற­ருக்­கும் அதி­க­மா­ன­தாக மழை­வீழ்ச்சி பதி­வா­னது. கன­காம்­பி­கைக் குளம் வான்­பா­யத் தொடங்­கி­யுள்­ளது என்று மாவட்ட நீர்ப்­பா­ச­னப் பொறி­யி­ய­லா­ளர் சுதா­க­ரன் தெரி­வித்­தார்.
மழை கார­ணமாக வீதி­க­ளில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கி­றது. பொது­மக்­கள் நெருக்­க­டியை எதிர்­கொண்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
“கிளி­நொச்சி மாவட்­டத்­தில் இந்த வரு­டத்­தில் கிடைத்த மிக அதிக மழை வீழ்ச்சி இது. இத­னால் குளங்­க­ளுக்­குத் தண்­ணீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளது. கன­காம்­பி­கைக் குளம் அதன் கொள்­ளவை விஞ்சி வான்­பாய்­கின்­றது. அதே­நே­ரம் 12 அடி கொள்­ள­ள­வு­டைய பிர­மந்­த­ னா­றுக் குளம் 11.2 அடியை எட்­டி­விட்­டது. அதே­போன்று 8.9 அடி கொள்­ள­ள­வு­டைய குட­மு­ருட்­டிக் குளம் 7.8 அடி­யைத் தொட்­டு­விட்­டது.இதே­போன்று ஏனைய குளங்­க­ளுக்­கும் தண்­ணீர் வேக­மாக வந்­து­கொண்­டி­ருக்­கி­றது. சுமார் 10 அடி அள­வு­டைய கரி­யாலை நாக­ப­டு­வான் குளத்­தில் மட்­டும் தற்­போது 2.6 அடிக்கு தண்­ணீர் நிரம்­பி­யுள்­ளது” என்று பொறி­யி­ய­லா­ளர் தெரி­வித்­தார்.

Comments
Loading...