கிளிநொச்சி, பூநகரி மக்களுடன் சிறீதரன் எம்பி சந்திப்பு

கிளிநொச்சி, பூநகரி கிராமங்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை ஆராயும் பொருட்டு பா.உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று அங்கு சென்று மக்களுடனான சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.

பூநகரியின் வலைப்பாடு, கரியாலை, நாகபடுவான், பள்ளிக்குடா, ஜெயபுரம், முழங்காவில். சோழ நிலா குடியிருப்பு, சோலை பல்லவராயன்கட்டு போன்ற கிராமங்களின் மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து கிராமங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தேவைகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

இந்த சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பூநகரி பிரதேசத்தின் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

பூநகரி பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் காணி, வீட்டுத்திட்டம், மின்சாரம், வாழ்வாதாரம், கல்வி போன்றவை தொடர்பாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளும் தேவைகளும் உள்ளதை அறிந்து கொண்டுள்ளேன்.

இந்த விடயங்களுக்கு உரிய அதிகாரிகளுடன் பேசி தீர்வுகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்ததுடன் பல்வேறு உதவிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.

உறுப்பினர்கிராமங்கள்கிளிநொச்சிசந்திப்புதேவைபாராளுபிரச்சனைபூநகரிமன்றம்
Comments (0)
Add Comment