குஜராத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநில அரசு பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து இன்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பலியானவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலரைக் காணவில்லை. ஆற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக செல்வதால், கடும் சவாலுக்கு மத்தியில் மீட்பு பணி நடக்கிறது.

இரவு வரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து துறை மந்திரி விஜய் ருபானி தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

25 பேர்கவிழ்ந்துகுஜராத்தில்பலிபஸ்
Comments (0)
Add Comment