சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), 19-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதினார்.
1 மணி 29 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் கெர்பர் 3-6, 5-7 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கியை (டென்மார்க்) சாய்த்து கால் இறுதிக்கு முன்னேறினார்.