05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் – முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
காலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.