சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
“மக்களின் சொந்தக் காணிகளை அவர்களிடம் திருப்பிக்கொடு”, மக்களின் நிலத்தைவிட்டு இராணுவமே வெளியேறு, காணிக்குள் இனியும் ஆமி வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் கேப்பாப்புலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தது.
அதேபோன்று மன்னாரிலும் அண்மையில் ஆதரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.