கேப்பாபுலவு மக்களுடன் ஸ்ரீ அமைச்சர் சுவாமிநாதன் விசேட சந்திப்பு! விரைவில் ஒப்படைக்கப் படும் என மீண்டும் பொய் வாக்குறுதி

கடந்த பல மாதங்களாக சொந்த நிலத்தை மீட்க போராடிவரும் கேப்பாபுலவு மக்களின் காணிகள் இன்று வரை ஒப்படைக்கப் படாத நிலையில் பல வகையில் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தனர்.

கடந்த வாரம் அரச அதிபரை வழிமறித்து மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்திய போது அங்கு வந்த அமைச்சர் சுவாமிநாதன் படிப்படியாக காணிகள் விடுவிக்கபப்டும் என கூறியிருந்தார். ஸ்ரீலங்கா இராணுவம் பெருந்தொகை பணம் கேட்பதாகவும் கொடுத்தால் மாத்திரமே விடுவிக்கப்படும்  எனவும் கூறியிருந்தார்.

அந்த வகையில் இன்று சம்மந்தன் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் விரைவில் காணிகள் ஒப்படைக்கப்படும் என மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதியை மக்களிடம் வழங்கியுள்ளார்.

கேப்பாபுலவுகொழும்புசுவாமிநாதன்போராட்டம்
Comments (0)
Add Comment