21-06-1990 அன்று மன்னார் மாவட்டத்தில்
கஜீவத்தை என்ற சிங்களப்பெயரால்
அழைக்கப்பட்ட சிங்களவர்களை கொண்டு
குடியேற்றப்பட்ட கொண்டைச்சி 100 ஏக்கர்
மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்த
சிங்கள இராணுவ முகாம் எமது தாக்குதலுக்கு உள்ளானது.
பிரேமதாசாவால் மிக ரகசியமாக சிங்கள தனி
போராட்ட அமைப்புகளுக்கு எதிராகஉருவாக்க பட்ட “பச்சைப்புலிகள் “என்ற அமைப்பின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தமிழர் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன்
பரந்து பட்ட அளவில் மேற்க்கோள்ளப்பட்ட
வேளையில் தலைவர் அவர்களின் தீர்க்க
தரிசனமத்தினால் கொண்டைச்சி முகாம்
தாக்கி அழிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இத்
தாக்குதலின் பின் அந்த இராணுவ முகாம்
எமது வீரர்களிடம் வீழ்ச்சி கண்டது.
சக்திவாய்ந்த பவள் என அழைக்கப்படும்
தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட
கவச வாகனம் ஒன்று உட்பட பெருமளவு
ஆயுதங்கள் எமது வீரர்களால்
கைப்பற்றப்பட்டன இந்த வெற்றிகரமான
தாக்குதலில் மேஜர் வசந்த் உட்பட பன்னிருவர்
வீரச்சாவடைந்தனர்.
மேஜர் வசந்த் தமிழீழ விடுதலைக்காக பல
களங்கள் கண்ட பெரும் வீரன். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ் வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டப்படாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் வசந்த் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன் . தலைவர் அவர்களின்
மெய்பாதுகாவலர் அணியின் முக்கியமானவன்
தலைவர் அவர்களின் பாசத்திற்குரியவன்.
தலைவர் அவர்களின் கட்டளையில் முதலாவது கரும்புலிகள் பயிற்சி பாசறை
உருவானபோது அதற்க்கு பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டான். பின்னாட்களில் பல
கரும்புலிகள், போர்ப்பயிற்ச்சி ஆசிரியர்கள்
( கேணல் வசந்த் 2009) என விடுதலை
வீரர்களின் வரவிர்க்கு வழியமைத்தான்.
கொடுக்கப்பட்ட சுமைகள் அனைத்தையும் சுமந்தான். இந்தத் தேசத்திற்காக இன்னும் இன்னும் பாரம் சுமந்தான். “சிறு அணிகளை வைத்துக்கொண்டு போர்க்களத்திற் பெரும் பணிகளை ஆற்றக்கூடிய வல்லமையை அவனிடத்திற்கண்டோம்.
இந்த வெற்றிச்சமரில் கைப்பற்றப்பட்ட எதிரியின் பவள் கவச வாகனம் உட்பட பல ஆயுதங்கள் எமது போராட்டத்திற்கு பின்னாட்களில் மிகப்பெரிய பலம் சேர்த்தன
வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்களுக்கு எமது
வீர வணக்கம்.