கொழும்பு இரத்மலான, சக்கிந்தாராம வீதியில் இராணுவ அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இராணுவ அதிகாரி களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.