கொழும்பில் ஐக்கிய மாநாடு – ஜெனிவா சமரைச் சமாளிக்க சிறிலங்கா புது வியூகம்

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரை இலக்கு வைத்து எதிர்வரும் மார்ச் மாதத்தில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் மாநாடொன்றை நடத்துவதற்கான நடவடிக்கையில் சிறிலங்கா  அரசு இறங்கியுள்ளது.  

இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.   தேசிய ஐக்கியத்துக்கான மாநாடு என பெயரிடப்பட்டுள்ள குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்கள் என அனைத்து தரப்பினரையும் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியும் இடம்பெறுகின்றது.   இதற்குப் புறம்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுப்பதற்கு சிறிலங்கா அரசு எதிர்ப்பார்த்துள்ளது என தெரியவந்தாலும் இதுதொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.   இலங்கையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்பதை மனித உரிமைகள் சபைக்கும் உலகுக்கும் காட்டும் நோக்கிலேயே இந்த மாநாட்டை அரசு ஏற்பாடு செய்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

ஜெனிவாவில் இம்முறை ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ஒரு பொறி முறையே இந்த மாநாடு என்றும் விமர்சிக்கப்படுகின்றது.   இந்நிலையில், இதுதொடர்பில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் நேற்று வினவியபோது,   “இனங்களுக்குடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்தத் தேசிய ஐக்கிய மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.   அரசியல்வாதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பினர், மாணவர் அமைப்பினர் என அனைத்துத் தரப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் பதிலளித்தார். அதேவேளை, எப்போது நடைபெறும் என வினவியபோது, மார்ச் மாதத்தில் நடைபெறும் – என்றார்.

இலக்குஐ.நா. மனித உரிமைகள் சபைசிறிலங்காஜெனிவாதேசிய மக்கள்மாநாடுவாசுதேவ நாணயக்கார
Comments (0)
Add Comment