சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வர் நேற்றையதினம்  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வென்னப்புவை சிரிகம்பல பிரதேசத்தில் வைத்தே குறித்த  சந்தேக நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து  பழைய மாதிரித்துப்பாக்கியொன்றும் அதற்கான ரவைகளும், கைத்துப்பாக்கி மற்றும் விளையாட்டுத் துப்பாக்கிகள் அவற்றுக்கான ரவைகள் என்பனவும்  பொலிஸாரினால் கப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள்துப்பாக்கிபொலிசார்வென்னப்புவை
Comments (0)
Add Comment