சமூக வலைதளங்களில் டோனியின் மகள் ஜிவா என்று ஒரு வீடியோ பரவி வருகிறது. ஆனால் அதில் இருப்பது தனது மகள் ஜிவா இல்லை என்று டோனியின் மனைவி சாஷி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டோனி உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி சாக்ஷி கடந்த பெப்ரவரி மாதம் 7ம் திகதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர் அந்த குழந்தைக்கு ஜிவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சாக்ஷி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குழந்தையை பார்க்க வர முடியாமல் தவித்த டோனிக்கு, அவரது மனைவி ஜிவாவின் பிஞ்சுக் கைகளின் புகைப்படத்தை அனுப்பி ஆறுதல் அளித்தார்.
இந்நிலையில் டோனி ஒரு குழந்தையை கொஞ்சும் படியான ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதுதான் டோனியின் மகள் ஜிவா என்றும் கூறப்பட்டது.
இதைப் பார்த்த டோனியின் மனைவி, ஜிவாவின் தவறான புகைப்படம் பரவி வருகிறது என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=X6Sl0gmcDy4″ width=”560″ height=”315″]