சம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 13ம் திகதி முதல் அக்டோபர் 4ம் திகதி வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.இந்த போட்டிகள் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் தகுதி சுற்று ஆட்டம் 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடக்கிறது. முதன்மை சுற்று 17ம் திகதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் ஐதராபாத், சண்டிகார், ராய்ப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
முதன்மை சுற்றில் 10 அணிகள் விளையாடவுள்ளன. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 2 அணிகள் தகுதி சுற்று மூலம் நுழையும். இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
’ஏ’ பிரிவு
‘ஏ’ பிரிவில் ஐ.பி.எல். சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கோர்செர்ஸ் (அவுஸ்திரேலியா), டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா), குவாலிபையர்–1 ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
’பி’ பிரிவு
‘பி’ பிரிவில் கிங்ஸ்லெவன் பஞ்சாப், ஹோபர்ட் ஹரிகோனஸ் (அவுஸ்திரேலியா) கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா) பார்படோஸ் டிரைடென்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), குவாலிபையர்–2 ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
தகுதி சுற்று
தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை), நார்தன் டிஸ்டிரிக்ஸ் (நியூசிலாந்து), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு முன்னேறும்.