பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீச தடை விதித்ததற்கு அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனின் தொடர்புகார்களே காரணம் என்று கூறப்படுகிறது. இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் எழுந்த சர்ச்சை காரணமாக சர்வதேச கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அவருக்கு தடை விதித்தது.இந்நிலையில் தற்போது இதற்கு காரணமானவர் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனின் புகார்கள் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றின் போது ஷேன் வாட்சன், சயீத் அஜ்மலின் பந்து வீச்சு வீசி எறிவது போல் உள்ளது என்று தொடர்ந்து நடுவர்களிடம் வாதாடியபடி இருந்தார். அந்த போட்டியில் தொடர்ந்து நியூசிலாந்தின் பில்லி பவ்டன் மற்றும் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃபிடம் வாட்சன் புகார் அளித்த படியே இருந்தார்.
மேலும் வாட்சன் தொடர்ந்து நடுவர்களிடம் பேசியதால் அஜ்மல் பந்து வீச்சில் பிரச்சினைகள் இருக்கிறது என்று பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது. அப்போது அஜ்மல், தேவையில்லாத பிரச்சினைகளை வாட்சன் கிளப்புகிறார் என்று கூறியிருந்தார். இந்த சம்பவங்களுக்கு 3 ஆண்டுகள் கழித்து ஓர் டி20 போட்டியின் போதும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த சமயம் மீண்டும் வாட்சன் அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பினார். அந்த டி20 போட்டியில் வாட்சனை வீழ்த்திய அஜ்மல் பெவிலியனை நோக்கிக் கை காண்பித்தார். ஆனால் கடைசியில் வாட்சனின் வாதமே வென்றுள்ளது. இன்றைய திகதியில் அஜ்மல் என்ற பவுலருக்கு பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=38BeVaq1M_k” width=”560″ height=”315″]