சர்வதேச உள்ளரங்க டென்னிஸ்: நடால் இரண்டாம் சுற்றுக்கு தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச உள்ளரங்க டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 அவர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 92-ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் லூகாஸ் ரசோலை எதிர்கொண்டார். 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்தப் போட்டியில், 1-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் நடால் போராடி வெற்றி பெற்றார்.

இரண்டாம் சுற்றுக்கு தகுதிசர்வதேச உள்ளரங்க டென்னிஸ்சுவிட்சர்லாந்துநடால்
Comments (0)
Add Comment