இதில் கரூர் வைஷ்யா வங்கியை சேர்ந்த சரவண கிருஷ்ணன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். 9 சுற்றுகள் இந்தப் போட்டியில் அவர் 8.5 புள்ளிகள் பெற்றார். கடைசி சுற்றில் அவர் பூபாலனுடன் ‘டிரா’ செய்தார். பிரசன்னா 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், பூபாலன் 7.5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.
கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.பாபு மனோகரன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சரவண கிருஷ்ணனுக்கு ரூ.40 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. முதல் 50 இடங்களை பிடித்தவர்கள் வரை மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.