சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டி டெல்லியில் நடைபெறுகின்றது

முதலாவது சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் போட்டியின் முதல் இரண்டு சுற்று ஆட்டங்கள் முறையே மணிலா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியன் ஏசஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராயல்ஸ், மணிலா மாவ்ரிக்ஸ், சிங்கப்பூர் சிலாமர்ஸ் ஆகிய 4 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான அணிகளில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), பீட் சாம்பிராஸ் (அமெரிக்கா) உள்பட முன்னணி வீரர்-வீராங்கனைகள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்று உள்ளனர்.

2-வது சுற்று முடிவில் இந்தியன் ஏசஸ் 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராயல்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், மணிலா மாவ்ரிக்ஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. ‘இந்த போட்டிக்கு அமோக வரவேற்பு இருப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் மேலும் 2 அணிகள் சேர்க்கப்படும்’ என்று போட்டி அமைப்பாளர் மகேஷ்பூபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த போட்டியின் 3-வது சுற்று ஆட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராயல்ஸ்-சிங்கப்பூர் சிலாமர்ஸ் அணியும், இந்தியன் ஏசஸ்-மணிலா மாவ்ரிக்ஸ் அணியும் மோதுகின்றன.

எமிரேட்ஸ்சர்வதேசம்சிங்கப்பூர்டென்னிஸ்பிரிமியர்போட்டிமணிலாலீக்
Comments (0)
Add Comment