சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோஸ்னா சின்னப்பா

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன் பட்டம் வென்றார்.

 மேலும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், தொடரின் முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹபீபா முஹமது-வை எதிர்த்து அவர் விளையாடினார். 47 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 11-8, 11-9, 11-6 என்ற நேர்செட்களில் ஜோஸ்னா சின்னப்பா வெற்றியை வசமாக்கினார். ஆடவர் பிரிவு இறுதியாட்டத்தில் இந்திய வீரர் மகேஷ் மங்கோன்கர், இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார்.

இந்திய வீராங்கனைசர்வதேச ஸ்குவாஷ் தொடர்சாம்பியன் பட்டம்ஜோஸ்னா சின்னப்பாமகளிர் ஒற்றையர் பிரிவு
Comments (0)
Add Comment