ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது.
கனடாவின் டொராண்டோவில் நடக்கும் ஆண்களுக்கான ரோஜர்ஸ் கோப்பை, இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக் ஜோடி 6–7, 4–6 என, பிரான்சின் ரிச்சர்டு காஸ்குயட், ஜோ–வில்பிரைட் டோங்கா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
மற்றொரு போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி 5–7, 4–6 என்ற நேர் செட் கணக்கில், பிரான்சின் ஜூலியன் பென்னடியு, ரோஜர்–வாசலின் ஜோடியிடம் வீழ்ந்தது.